எழிலுக்கு செழியன் கிப்ட் கொடுக்க குடும்பத்தில் இருக்கும் அனைவரும் சந்தோஷமாக உள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் எழில் வீட்டுக்கு வருகிறார். எழில் வா செழியா என்று அழைத்து பேசிக் கொண்டிருக்கின்றனர். உடனே எழில் நான் போய் டிபன் வாங்கிட்டு வரேன் என்று கிளம்ப அதெல்லாம் ஒன்னும் வேணாம் நானே எல்லாருக்கும் வாங்கிட்டு வந்துட்டேன் என்று பிரியாணி கொடுக்கிறார்.உன்னை நினைச்சா பெருமையாகவும் இருக்கு கவலையாகவும் இருக்கிறது என்று சொல்லுகிறார் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து செழியனுக்கு ஒரு போன் வருகிறது. ஃபோனை எடுத்த செழியன் ப்ளூ கலர் பெயிண்ட் தான் உள்ள வாங்க என்று சொல்லுகிறார். என்னவென்று பார்த்தால் எழிலுக்காக டிவியை கிப்டாக வாங்கி வந்துள்ளார் செழியன்.
பிறகு எல்லோரும் சாப்பிட்டு செழியன் என் வீட்டை சுத்தி பார்த்துவிட்டு நான் நினைச்சதை விட சூப்பரா இருக்கு எழில் என்று சொல்லுகிறார். காலையில் சத்தம் கேட்க யார் என்று பார்த்தால் கோபி வந்து நிற்கிறார்.
உள்ள வரலாமா என்று எழிலிடம் கேட்டால் வாங்க என்று சொல்லுகிறார். நிலா பாப்பாவிற்கு ஸ்நாக்ஸ் கொடுத்து கொஞ்சுகிறார். பாக்யா பற்றி பேச இருவரும் டென்ஷனாக பேசல பேசல என்று அதோட அமைதி ஆகிறார். நிலாவிடம் பணத்தை கொடுக்க அதெல்லாம் வேணாம் கொடுக்குறீங்க என்று எழில் கேட்கிறார் நான் உனக்கு கொடுக்கல என் பேத்திக்கு கொடுக்கிறேன் என்று சொல்லி நிலா பாப்பாக்கு கொடுக்கிறார் அதுக்கு எதுக்கு அவ்ளோ பணம் கொடுக்குறீங்க அவன் எப்படி செலவு பண்ணுவா என்று கேட்க அவளுக்கு நிறைய செலவு இருக்கும் நிறைய சாக்லேட் வாங்கிப்பா,கேக் வாங்கிப்பா என்று சொல்லி கொடுக்கிறார். உடனே செழியன் மற்றும் கோபி இருவரும் கிளம்பி விடுகின்றனர்.
மறுபக்கம் செல்வி போனில் வீடியோ ஒன்றை பார்த்துக் கொண்டே வர அதனைப் பார்த்த குடும்பத்தினர் அந்த போனை முதல்ல கீழ வை அப்படி என்ன பாத்துகிட்டு இருக்க என்று கேட்கின்றனர். அதற்கு சூப்பர் சிங்கர் ஃபைனல்ஸ் பார்த்துகிட்டு இருக்க யார் ஜெயிக்கப் போறாங்கன்னு தெரியல திவ்யா என்ற பொண்ணு நல்லா பாடுது என்று சொல்லுகிறார். உடனே ஈஸ்வரி அந்த பொண்ணு நல்ல பொண்ணு நல்லா பாடுது ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த பொண்ணு பாடி ஜெயித்தா அந்த குடும்பத்துக்கே பெருமை என்று சொல்லுகிறார். அதற்கு செல்வி ஆமாம்மா அந்த அம்மா ஒரு இன்டர்வியூல முன்னாடி எங்களை யாருமே மதிக்க மாட்டாங்க ஆனா இப்போ திவ்யாவோட அம்மாவான்னு கேக்குறாங்க என்று பெருமையாக சொல்லி இருந்ததாக பேசிக் கொள்கின்றனர்.
இந்நிலையில் இனியா கற்பனையில் இனியாவோட அம்மா தானே நீங்க இனியாவோட அண்ணன் தான நீங்க என்று பெருமையாக பேசுமாறு கற்பனை செய்து கொள்கிறார். உடனே நானும் இந்த குடும்பத்துக்கு பெருமையை சேர்க்கப்போறேன் என்று சொல்ல என்ன சொல்றேன் என்று கேட்கிறார் குடும்பத்தினர்.
உடனே இனியா நானும் சூப்பர் சிங்கரில் பாட போறேன் என்று சொல்ல குடும்பத்தினர் அனைவரும் சிரிக்கின்றனர். நானும் அந்த மாதிரி வீடு வாங்குவ இந்த குடும்பத்துக்கு பெருமை சேர்த்து தருவேன் என்று சொல்ல, அதற்கு செல்வி முதல்ல பாட தெரியணும் என்று சொல்லி கிண்டல் அடிக்கிறார். எனக்கு என்ன நான் நல்லா தான் பாடுவேன் என்று சொல்ல நம்பிக்கை இருக்கலாம் அதுக்கு இவ்வளவு நம்பிக்கை இருக்க கூடாது என்று கிண்டல் பண்ணி சிரிக்கின்றனர்.
ஆனால் ஜெனி இனியாவுக்கு சப்போர்ட் பண்ண இனியாவை ஒரு பாட்டு பாட சொல்லி கேட்கிறார். அனைவரும் தடுத்தும் கேட்காத ஜெனி நீ பாடு இனியா என்று சொல்லுகிறார்.
இனியா பாட்டு பாடத் தொடங்க அனைவரும் காதில் கையை வைத்துக் கொள்ளுகின்றனர் ஜெனி ஷாக் ஆகிறார். என்னக்கா நல்லா பாடுன என்று கேட்க இனியா இனிமேல் நம்மளுக்கு இந்த வேலை வேணாம் நம்ம வேற ஏதாவது ட்ரை பண்ணலாம் என்று சொல்ல அனைவரும் சிரிக்கின்றனர். இனியா காலேஜ்ல என்னை யாரு கூட்டிட்டு போய் விடுவது என்று சொன்ன பாக்யா நான் வரேன் நீ போ என்று சொல்லுகிறார். செழியன் நான் கூட்டிட்டு போறமா? நான் சும்மாதான் இருக்கேன் என்று சொல்லுகிறார். உடனே ஈஸ்வரி நீங்க யாரும் வேணாம் நானே கூட்டிட்டு போறேன் என்று சொல்ல பாக்யாவும் சரியென சம்மதிக்கிறார்.
இனியா மற்றும் ஈஸ்வரி இருவரும் ஆட்டோக்காக காத்திருக்கும் போது அந்த இடத்தில் கோபி வருகிறார். வா இனியா என்று காரில் கூட்டினு போறேன் என்று கூப்பிட ஈஸ்வரி வேண்டாம் என தடுக்கிறார். ஏன் என் பொண்ண நான் கூட்டிட்டு போக கூடாதா என்று கேட்க உன் கூட சண்டை போடுற அளவுக்கு என் உடம்புல தெம்பு இல்ல என்று சொல்லி அமைதியாகிறார் ஈஸ்வரி. மீண்டும் மீண்டும் கோபி கூப்பிட்டுக் கொண்டே இருக்க அந்த நேரம் பார்த்து ஆட்டோ வந்துவிட இருவரும் ஆட்டோவில் ஏறி சென்று விடுகின்றனர்.
பிறகு காலேஜில் வந்து விட்டு கிளம்ப உள்ளே வந்து விடவா என்று ஈஸ்வரி கேட்க வேண்டாம் பாட்டி நானே உள்ள போய்கிறேன் என்று சொல்லுகிறார். பின்னாலே கோபி வந்து திரும்பவும் கூப்பிட கோபிஎன்ன பேசினார்?அதற்கு ஈஸ்வரி சொன்ன பதில் என்ன?என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.