வேட்டையன் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
த.செ. ஞானவேல் இயக்கத்திலும்,லைகா ப்ரோடுக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் மஞ்சு வாரியர்,பகத் பாசில், சுபாஸ்கரன், அமிதாப்பச்சன், அபிராமி, துஷாரா விஜயன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6:00 மணிக்கு நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படியான நிலையில் இந்த படத்தின் செகண்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.