தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ,ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி தங்கைகளை கூட்டிக்கொண்டு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து போய்க் கொண்டிருக்கிறார். தங்கைகள் இருவரும் நாங்க சொன்னாலே கூட்டின்னு போக மாட்ட இப்ப என்னகா என்று கேட்க, ரஞ்சிதா அன்னைக்கு நகை மேல ஆசை இருந்ததுனால தான் அவ அந்த நகையை போட்டு பாத்திருக்கா, அப்பவே முடிவு பண்ணிட்டேன் இவளுக்கு சின்னதா ஒரு செயின் வாங்கி கொடுக்கணும்னு அதனாலதான் என்னோட செயின் கம்மல் எல்லாம் எடுத்துட்டு வந்து இருக்கேன் மாத்திட்டு புதுசா வாங்கிடலாம் என்று சொல்ல இருவரும் சந்தோஷப்படுகின்றனர்.
பஸ்ஸில் இருந்த இரண்டு திருட்டு லேடிஸ் பஸ்ஸில் இருப்பவர்களிடம் நகையை திருடி நந்தினியின் பையில் போட்டு விடுகிறார். நகை காணாமல் போனவர்கள் பதற டிரைவர் உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போடுகிறார். நான் வர வழியில தான் இருக்கேன் பஸ்ல நிறுத்தாம வந்துகிட்டே இரு என்று போலீஸ் சொல்லி ஃபோனை வைக்கிறார்.
போலீஸ் வந்தவுடன் பஸ்சை நிறுத்தி செக் பண்ண நந்தினியின் பையில் நகைகள் இருப்பதை பார்த்து நந்தினி அதிர்ச்சி அடைகிறார். எவ்வளவு சொல்லியும் நம்பாத போலீஸ் மூணு பேரையும் அரெஸ்ட் பண்ண சொல்லுகிறார். ஆனால் நந்தினி என் தங்கச்சி இரண்டு பெரிய விட்ருங்க நான் வேணா வரேன் என்று ஜீபில் ஏறி வருகிறார்.
மறுபக்கம் இன்ஸ்பெக்டர் நகைக்கடைக்காரன் மற்றும் தேங்காய் வியாபாரி என அனைவரும் சந்தோஷமாக பேசி சிரிக்கின்றனர். அப்போதுதான் இன்ஸ்பெக்டர் பிளான் பண்ணி நந்தினியை உள்ளே வைத்தது தெரிய வருகிறது.இது மட்டும் இல்லாமல் இருக்கிற கேஸ் எல்லாத்தையும் அவ மேல போட்டு திருட்டு பட்டம் கொடுத்து, அவளை அசிங்கப்படுத்தி திருடிய ஆக்குற என்று கோபமாக பேசுகிறார். இதையெல்லாம் கேட்டு தேங்காய் வியாபாரி சந்தோஷப்பட்டு சிரிக்கிறார்.
உடனே நந்தினியை பார்க்க அம்மாச்சி அப்பா மற்றும் தங்கச்சி என அனைவரும் போலீஸ் ஸ்டேஷன் வருகின்றனர். வெளியில் நகை காணாமல் போனவர்கள் நிற்க அவர்களிடம் அம்மாச்சி என் பேத்தி மேல யார் கம்ப்ளைன்ட் கொடுத்தது அவ மனசு தங்கம் என்று கத்துகிறார். உள்ளே வந்து நந்தினி இடம் விளையாட்டுக்கு கூட திருட்டு பழக்கம் கூடாதுன்னு சொல்லுவியே என்னமா இது என்று அழுகின்றனர். அம்மாச்சி போலீஸிடம் போய் பேச என் பேத்தி எந்த தப்பும் பண்ணல அனுப்பிடுங்க என்று சொல்ல அனுப்புறேன் ஜெயிலுக்கு வேணா அனுப்புறேன் என்று சொல்லிவிடுகிறார்.
அங்கு இருந்த கான்ஸ்டபிள் ஒருவர் போலீஸிடம் எனக்கு தெரிஞ்ச பொண்ணுதான் சார் அந்த பொண்ணு தப்பு பண்ண வாய்ப்பு இல்லை என்று சொல்ல அவரை வாயடைத்துவிட்டு போய் எஃப் ஐ ஆர் போடு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். வெளியே வந்த கான்ஸ்டபிள் நந்தினியின் குடும்பத்தாரிடம் ஒரு வக்கீலை பார்க்க சொல்ல நான் எஃப்ஐஆர் கொஞ்சம் லேட்டா எழுதுற நீங்க அந்த வக்கீல பார்த்து கூட்டிட்டு வாங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
வக்கீல் உடன் வந்த நந்தினியின் அப்பா போலீஸ் ஸ்டேஷன் உள்ளே வருகிறார். இன்ஸ்பெக்டர் இடம் உங்களுக்கு ஒருத்தரை பார்த்தாலே அவங்க நகை திருடுவாங்களா இல்லையா என்று உங்களுக்கு தெரியாதா? என்று வக்கீல் கேட்கிறார். அதற்கு நக்கலாக பதிலளிக்கும் இன்ஸ்பெக்டர் வக்கத்த உங்களுக்காக இருக்கிற வக்கீல் நீங்கதானே என்று கிண்டல் பண்ணுகிறார். இப்ப நாங்க என்ன பண்ணனும் என்று சொல்லுங்க என்று கேட்க நேரா போட்டுக்கு போங்க அங்க இந்த மாதிரி ஜட்ஜ் உக்காந்துட்டு இருப்பாரு அங்க போய் கேளுங்க என்று சொல்லுகிறார்.
அந்த நேரம் பார்த்து டிஎஸ்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு வர என்ன கேஸ் என்ன ஆச்சு என்று கேட்கிறார். உடனே இன்ஸ்பெக்டர் பஸ்ல நக திருடி இருக்கு சார் இந்த பொண்ணு என்று சொல்லுகிறார். மேலும் இந்த பொண்ணு திருடன்னு சொன்னதுக்கு சாட்சி இருக்கா என்று கேட்க அப்படி யாரும் இல்ல சரவணா திருடனை எல்லாம் நவையும் இந்த பொண்ணோட பேக்ல தான் இருக்கு என்று சொல்லுகிறார். வேற யாராவது கூட எல்லாத்தையும் திருடிட்டு இந்த பொண்ணு மேல பழி போட்டு இருக்கலாம்ல என்று சொல்லுகிறார். மேலும் பஸ்ஸில் இருப்பவர்களிடம் கைரேகை எடுத்தீர்களா? என்று கேட்க அதற்கும் இல்லை என்று இன்ஸ்பெக்டர் சொல்லுகிறார். அப்படி எடுத்திருந்தாலே ஈஸியா கண்டுபிடிச்சு இருக்கலாம் இதுதான் நீங்க விசாரிக்கிற லட்சணமா என்று இன்ஸ்பெக்டரை திட்டுகிறார்.
இந்தப் பொண்ணு யாருன்னு உனக்கு தெரியுமா சீட்டு பணம் கட்டிய ஏமாத்திட்டு போக இருந்தா நகை கடைக்காரன உள்ள வச்சு பூட்டி எங்கள வர வச்சு அவளோ எங்ககிட்ட ஒப்படைச்சு நகை எல்லாம் மீட்டு கொடுத்த பொண்ணு இது. நம்ம செய்ய வேண்டிய வேலையை ஒரு பொண்ணா தனியா நின்னு இந்தப் பொண்ணு செஞ்சிருக்கு. என்று,நந்தினியிடம் சொல்லி நீ போமா என்று அனுப்பி வைக்கிறார். மேலும் இதுல நான் கொண்டு வந்த நகையும் இருக்கு சார் என்று சொல்ல நீ போம்மா உன் நகை உன்ன தேடி வீட்டுக்கு வருவோம் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
அந்த டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் இடம் இன்னும் ஒரு வாரத்துல நகைய திருடுனவங்க கண்டுபிடிக்கிற என வார்னிங் கொடுத்துவிட்டு கிளம்புகிறார். வெளியில் இருப்பவர்கள் எங்க நகை என்று கேட்க இன்னும் ரெண்டு நாள்ல உங்க நகைக்கான ஆதாரத்தை எடுத்துக்கிட்டு வந்து வாங்கிக்கோங்க என்று சொல்ல அனைவரும் நன்றி சொல்லிவிட்டு கிளம்புகின்றனர்.
அம்மாச்சி எல்லாரையும் குளிச்சிட்டு வர சொல்லி மூணு பேரையும் நிக்க வச்சு சுத்தி போடுகிறார். என் பேத்தி எப்படிப்பட்டவ அவ மேல திருட்டுப்பழி போட்டு இருக்காங்க அவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க என்று சாபம் விடுகிறார்.
நந்தினி என்ன வேன்ல ஏத்தும் போது கூடபரவால்ல தங்கச்சிங்கள ஏத்தணும்னு சொல்லும் போது பதறிட்டேன் என்று நந்தினி சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் இப்படிப்பட்ட பையனுக்கு எங்க வீட்டு பொண்ணயே கொடுக்க மாட்டோம் அதுதான் உண்மை என்று மாதவி பெண்ணின் அம்மாவிடம் சொல்லுகிறார்.
அந்த இன்ஸ்பெக்டர நான் ஏதாவது பண்ணி இருக்கணும் இல்ல நான் இன்ஸ்பெக்டருக்கு தெரிஞ்சவங்க என்னால ஏதாவது பாதிக்கப்பட்டிருக்கனும், என்று நந்தினி பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் சூர்யா இந்த கல்யாணத்துல இன்ட்ரஸ்ட் இல்ல என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பி விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.