விரைவில் சன் டிவி சீரியல் ஒன்று முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இனியா என்ற சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
ஆலியா மானசா ஹீரோயின் ஆக நடிக்கும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக தகவல் கசிந்து உள்ளது.
வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளது என்ற தகவலை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.