Vanitha Kisses to Peter Paul
Vanitha Kisses to Peter Paul

திருமணம் முடிந்ததும் காதல் கணவருக்கு முத்தம் கொடுத்துள்ளார் வனிதா.

Vanitha Kisses to Peter Paul : தமிழ் சினிமாவின் நடிகரான விஜயகுமார் மற்றும் நடிகையான மஞ்சுளா ஆகியோரின் மகள் வனிதா விஜயகுமார்.

சந்திரலேகா என்ற படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்திருந்தார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் வனிதா வீட்டுக்கு மனைவியுடன் சென்று சர்ப்ரைஸ் அளித்த தளபதி விஜய்!

இன்று இவருக்கு பீட்டர் பால் என்பவருடன் மூன்றாவது திருமணம் நடைபெற்றது. தன்னுடைய இரண்டு மகள்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் அவர்களை திருமணம் கோலாகலமாக நடந்து உள்ளது.

வனிதாவும் பீட்டர் பாலும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு இருவரும் லிப் லாக் கிஸ் கொடுத்து கொண்டு அன்பை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கொரோனா பரவி வரும் இந்த சமயத்தில் இது தான் சமூக இடைவெளியா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.