வட இந்திய பைலட் உடன் திருமணம் நடந்து முடிந்ததாக வெளியான தகவல் குறித்து வனிதா விளக்கமளித்துள்ளார்.

Vanitha About Fourth Marriage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். தளபதியுடன் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அதன் பின்னர் சில படங்களில் நடித்துவிட்டு நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வட இந்திய பைலட்டுடன் திருமணம் முடிந்ததா? தீயாக பரவிய தகவலுக்கு வனிதா கொடுத்த பதில்

இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் தெரிந்த நிலையில் முதல் கணவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்து கொண்ட இவர் ஒரு மகளைப் பெற்றெடுத்தார். பின்பு இந்தத் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

அதன் பின்னர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்து கொள்வதாக கூறப்பட்டு வந்தது. உங்கள் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். கடந்த வருடம் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் அவர் மொடா குடிக்காரர் எனக் கூறி அவரை வீட்டை விட்டு விரட்டினார். இந்த நிலையில் இவர் வட இந்தியாவைச் சேர்ந்த பைலட் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக கூறி நான்காவது திருமணம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.