Valimai Release in 5 Languages

வலிமை படம் பற்றி வெளிவந்த தகவலால் படம் தள்ளிப் போனதும் ஒரு விதத்தில் நல்லதுதான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Valimai Release in 5 Languages : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை அந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஜனவரி 13-ஆம் தேதியான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதலில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் வெளியாக இருந்த இந்த படம் இந்தியிலும் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டது.

திரைப்பட நடிகைகளுக்கான பிரத்யேக விருது வழங்கும் விழா | JFW Awards | Part – 5 | Jaya TV

வைகுண்ட ஏகாதசி : இன்று சொர்க்கவாசல் திறப்பு

இதனையடுத்து தற்போது மீண்டும் படம் தள்ளிப் போன நிலையில் இதை இடைவெளியை சாதகமாக்கி கொண்டு படத்தை மலையாளம் மற்றும் கன்னடம் என மேலும் இரண்டு மொழிகளில் டப் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இதனால் வலிமை திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.