வலிமை படத்திலிருந்து அம்மா பாடல் வெளியாகி உள்ளது.

Valimai Mother Song Lyrics Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வலிமை படத்திலிருந்து வெளியானது அம்மா பாடல்.. தெறிக்குது யுவன் மியூசிக்.!!

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஹூமா குரோஷி நாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே நாங்க வேற மாதிரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்னர் டிசம்பர் 5ஆம் தேதி மாலை இரண்டாவது சிங்கிள் ட்ராக் ஆக அம்மா பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

வலிமை படத்திலிருந்து வெளியானது அம்மா பாடல்.. தெறிக்குது யுவன் மியூசிக்.!!

அதன்படி தற்போது இந்த பாடல் லிரிக் விடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுத சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.