தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வாத்தி படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

நடிகர் தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் “வாத்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷ்க்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

மேலும் பிரபல தயாரிப்பாளரான நாகவம்சி தயாரிக்கும் இப்படம் நேரடியாக தெலுங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தனுஷ் பிறந்த நாளான இன்று இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது நடிகர் தனுஷ் இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அதனை சிறப்பித்து வாழ்த்து கூறும் விதமாக வாத்தி படக்குழு இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் டீசர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது. அதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இப்போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.