வாத்தி திரைப்படத்தின் டெலிட் செய்யப்பட்ட காட்சியின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கோலிவுட் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த மாதம் வாத்தி திரைப்படம் வெளியானது. தெலுங்கு இயக்குனர் வெங்கி இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியானது.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க சமுத்திரகனி வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். கல்வியை மையமாகக் கொண்டு உருவாகியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்திலிருந்து நீக்கப்பட்டு இருந்த காட்சியின் வீடியோவை படக்குழு ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.