வாத்தி திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியானது.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வரும் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் அனைத்து பாடல்களும் இணையதளத்தில் வெளியாகி இருப்பதை ஜீவி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவின் மூலம் தெரிவித்து இருக்கிறார். அது தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.