Web Ads

பாலகிருஷ்ணாவுடன் நடன சர்ச்சை: நடிகை ஊர்வசி ரவுதெலா ஹாட்டான ‘கலை’ விளக்கம்..

நடிகை ஊர்வசி ரவுதெலாவின் சர்ச்சையான ஆட்டத்திற்கு, அவர் கலையுணர்வுடன் வழங்கிய வாய்மொழி காண்போம்..

அதாவது, பாபிகோலி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள திரைப்படம் ‘டாகு மகாராஜ்’. பாபி தியோல், பிரக்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்பட பலர் நடித்துள்ளனர்.

நாகவம்சி தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். கடந்த12-ம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியானது.

தமிழகத்தில், இப்படம் (தமிழில்) டப் செய்யப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை வெளியானது. முன்னதாக, இதனை இயக்குநர் நெல்சன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தெலுங்கில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் இப்படம், தமிழில் எப்படி ரிசல்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கில் வெளியாகியுள்ள ‘டாகு மகாராஜ்’ படம், 4 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.

இப்படத்தில், பாலகிருஷ்ணாவுடன், ஊர்வசி ரவுதெலா நடனமாடிய மாஸான பாடல் ஒன்று இணையத்தில் கொண்டாடப்பட்டது. அதே வேளையில், அந்த நடன அசைவுகள் சர்ச்சைகளையும் உருவாக்கியது.

மேலும், அப்படம் வெளியானவுடன் நடைபெற்ற பார்ட்டியில் பாலகிருஷ்ணா- ஊர்வசி ரவுதெலா இருவரும் அதே மாதிரி நடனமாடினார்கள். அந்த வீடியோ பதிவு மீண்டும் சர்ச்சையை கிளப்பியது.

இந்தச் சர்ச்சை குறித்து ஊர்வசி ரவுதெலா, “பாலையாவுடன் ஆடுவது தொடர்பாக, எந்த ஒரு பெர்பார்மன்ஸாக இருந்தாலும் அது தொடர்பான பலதரப்பட்ட கோணங்களை நான் மதிக்கிறேன்.

அவரை போன்ற ஒரு ஆளுமையுடன் பணிபுரிவது மிகப்பெரிய ஒரு கவுரவம். அந்த அனுபவம் என்பது ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை மற்றும் கலையின் மீதான ஆர்வம் ஆகும்.

பாலையா சாருடன் அந்த நடனம் என்னை பொறுத்தவரை, வெறும் பெர்பார்மன்ஸ் மட்டும் அல்ல. அது கலை, கடின உழைப்பு மற்றும் கலை மீதான மரியாதை. அவருடன் பணிபுரிவது என்பது எனக்கு ஒரு கனவு. ஒவ்வொரு ஸ்டெப்பும், ஒவ்வொரு அசைவும் அழகான ஒரு விஷயத்தை உருவாக்குகிறது’ என கலையின் மீதான பெரும் பற்றை வெளிப்படுத்தி விளக்கம் அளித்துள்ளார்.

urvashi rautela about dancing controversy with balakrishna
urvashi rautela about dancing controversy with balakrishna