என்னுடைய மகன் நடிக்கும் படத்தை இயக்குகிறேன்: திருவண்ணாமலையில் இருந்து ரவிமோகன்..
‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற வாசகம் போல, இன்று திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த ரவியின் தன்னம்பிக்கை வார்த்தைகள் பார்க்கலாம்..
ஜெயம் ரவி என்ற ரவி மோகன் நடிப்பில் ‘பிரதர்’ படம் வெளியாகி பெரியளவில் ஓடவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரிலீஸான ‘காதலிக்க நேரமில்லை’ படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரவி, நித்யா மேனன் இடையேயான பொருத்தம் ரொமான்டிக் காய் பழுத்து இனிப்பை தந்திருக்கிறது.
தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் “புதிய தோற்றத்துடன் புதிய பாணியில்” இணைந்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, அதர்வா முக்கிய கேரக்டரில் வருகிறார்.
இந்நிலையில், இன்று திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் ரவி. தன் அடுத்த படமான ஜீனியின் படம் 95 சதவீதம் முடிந்து விட்டது. விரைவில் அறிவிப்பு வரும்’ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மீண்டும் தனது மகனுடன் இணைந்து நடிக்கிறார். இயக்குநர் சக்தி சவுந்தர் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடித்த ‘டிக் டிக் டிக்’ படம் 2018-ம் ஆண்டு வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் ரவி மோகனுடன் ஆரவ் ரவி நடித்திருந்தார்.
மேலும், இது குறித்து ரவி மோகன் கூறுகையில், ‘நடிகராக இல்லையென்றால், இயக்குநராக மாறியிருப்பேன். அதற்கேற்ப நானும் என் மகனும் நடிக்கும் கதை ஒன்றை என்னுடைய அப்பா வைத்திருக்கிறார். எனது இயக்கத்தில் கூட நானும் அவனும் ஒரு படத்தில் இணைந்து நடிப்போம்’ என்றார்.
சமீபத்தில் ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என்ற மாற்றிய நிலையில், ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார்.
