வெற்றிமாறனின் விடுதலை படத்தில் முதலில் நாயகனாக நடிக்க இருந்தது யார் என தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கி வந்த இவர் தற்போது சூரியை ஹீரோவாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சூரி கிடையாது.. வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவரா? வெளியான ஷாக் தகவல்

இந்த படத்தில் சூரிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் நான்கு கோடி பட்ஜெட்டில் தொடங்கிய இந்த திரைப்படம் 40 கோடி வரை உயர்ந்ததால் தற்போது படக்குழுவினருடன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் கைகோர்த்துள்ளது.

சூரி கிடையாது.. வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவரா? வெளியான ஷாக் தகவல்

இப்படியான நிலையில் இந்த படத்தில் முதலில் சூரிக்கு பதிலாக நாயகனாக நடிக்க இருந்தது நடிகர் வடிவேலு தான் என சொல்லப்படுகிறது. சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக அதன் பின்னரே இந்த வாய்ப்பு சூரிக்கு கிடைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.