Unknown Secrets of Maanadu First Single

பாகுபலி பட பாணியில் சிம்புவுக்காக மாநாடு படக்குழு செய்த வேலை குறித்து தெரிய வந்துள்ளது.

Unknown Secrets of Maanadu First Single : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. டி ராஜேந்தர் மகனான இவர் தன்னுடைய அப்பாவின் இயக்கத்தில் வெளியான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். தற்போது ஹீரோவாக சர்ச்சைக்குரிய நடிகராக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ரெட் கட் போடப்பட்டு படங்களில் நடிக்க முடியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

இறுதியாக ஈஸ்வரன் திரைப்படம் வெளியான நிலையில் அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்துள்ள மாநாடு திரைப்படம் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் வெந்து தனிந்தது காடு, 10 தல என இரண்டு திரைப்படங்கள் உருவாக்கி வருகின்றன.

அவரது பேட்டிங்கில், எதிரணிக்கு பயம் வரும் : சாம்சன்

தற்போது மாநாடு படம் பற்றிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த படத்தில் முதல் சிங்கிள் ட்ராக் பாடலை படமாக்கும் போது சிம்பு குண்டாகத் தான் இருந்தாராம். பின்னர் சிம்பு உடல் எடை குறைத்த பிறகு இந்தப் பாடலை மீண்டும் படமாக்க வேண்டும் என்றால் அதிக செலவு ஆகும் என்பதன் காரணத்தினால் படக்குழு CG எஃபெக்ட் மூலம் அவரை ஒல்லியாக காண்பித்துள்ளனர்.

நிறைய பேரு Modeling ரொம்ப Risk-ன்னு சொல்லுவாங்க…ஆன? – Model Akshitha SPeech | F.A.T Fashion Week

பாகுபலி படத்தில் அனுஷ்காவின் உடல் எடையை குறைத்து காண்பிக்க இதே CG எஃபெக்ட் தான் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.