லால் சலாம் படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்ட நடிகரை தூக்கி எறிந்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

Unknown Secrets of Lal Salam Movie : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக உள்ள லால் சலாம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

அதிக சம்பளம் கேட்ட நடிகர்.. தூக்கியெறிந்த ஐஸ்வர்யா.. ரஜினி நடிக்கும் லால் சலாம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

மேலும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க உள்ளனர். ஆனால் முதலில் விஷ்ணு விஷாலுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் என தெரியவந்துள்ளது.

அதிக சம்பளம் கேட்ட நடிகர்.. தூக்கியெறிந்த ஐஸ்வர்யா.. ரஜினி நடிக்கும் லால் சலாம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

ஆமாம் இந்த படத்தில் முதலில் அதர்வாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்த நிலையில் அவர் அதிக சம்பளம் கேட்ட இந்த படத்தில் இருந்து தூக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.