விருது நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனுக்காக சண்டையிட்டுக் கொண்ட பிரபலங்களின் வீடியோ வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் பன்முகத் திறமைகளுடன் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது தாய்வான் பகுதியில் நடந்து முடிந்ததை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஆனந்த விகடன் விருது விழாவில் கமல்ஹாசன் முன்னணியில் மேடையில் நடிகர் மணிகண்டன் “என்னுடைய இடத்தை லோகேஷ் பிடித்துக் கொள்ள பார்க்கிறார், அதற்கு நான் விடமாட்டேன்” எனக் கூற அதற்கு இயக்குனர் லோகேஷும் பதிலுக்கு “ஆயிரம் மணிகண்டன் வந்தாலும் சட்டையை கிழித்துக்கொண்டு சண்டையிட நான் தயார்” என்று கூறியுள்ளார். இதன் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.