கால் டாக்ஸி
கால் டாக்ஸி

கால் டாக்ஸி என்ற திரைப்படத்தில் வில்லனாக களம் இறங்கியுள்ளார் டி பி. கஜேந்திரன் அவர்களின் உதவியாளர்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர், நடிகர் என பன்முகத்திறமைகளுடன் ஒருவராக வலம் வருபவர் டிபி கஜேந்திரன். இவரிடம் உதவியாளராக பணியாற்றி இவர் பெயர் நிமல்.

இவர் தற்போது கால் டாக்ஸி என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதுகுறித்து நிமல் அளித்த பேட்டி ஒன்றில் நான் சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது இருந்த ஆசையால் சென்னை வந்தேன்.

சென்னையில் எனக்கு கஜேந்திரன் சாரைத் தவிர வேறு யாரையும் தெரியாது. இதனால் அவரை என் நிலைமையை எடுத்துக் கூற முதலில் சினிமா பற்றி தெரிந்துகொள் அதற்கப்புறம் நடி என கூறி என்னை நம்பி மொத்த தயாரிப்பு பணிகளையும் கொடுத்தார்.

வில்லனாக களமிறங்கும் டிபி கஜேந்திரன் உதவியாளர்.!!
நிமல்

சினிமா உலகம் சார்ந்த சகலத்தையும் கற்றுக் கொடுத்த குரு அவர்தான். தற்போது என்னுடைய ஆசைபடி கால் டாக்ஸி என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் வில்லனாக நடித்துள்ளேன். இந்த படத்தை பா பாண்டியன் அவர்கள் இயக்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அருணை பாலா இயக்கத்தில் அட்லி என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். மேலும் ஏ ஆர் முருகதாசின் உதவி இயக்குனர் வி எஸ் செல்வதுரை இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் நல்ல நல்ல கதாபாத்திரத்துக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் நிமல் தெரிவித்தார்.