ஷாருக்கான் முதல் விஜய் வரை அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார் அவர்கள் சம்பளம் என்ன என்பது குறித்து இணையதளம் வெளியிட்டுள்ளது.

திரையுலகம் என்றால் பணம் புழங்கும் இடமாக இருந்து வருகிறது என்பது யாராலும் மறுக்க முடியாது. தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டாலே டாப் நடிகர்கள் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகின்றனர்.

அப்படி இருக்கையில் இந்திய திரை உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார்? அவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த லிஸ்ட் பிரபல இணையதளமான டி என் ஏ வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியாகி உள்ள இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள நடிகர்களும் அவர்களது சம்பளம் குறித்தும் பார்க்கலாம் வாங்க.

1. ஷாருக்கான் – ரூ 100 கோடி + லாபத்தில் 60% ஷேர்

2. சல்மான் கான் – ரூ 100 கோடி + லாபத்தில் 70% வரை ஷேர்

3. அமீர் கான் – ரூ 100 கோடி + லாபத்தில் 70% வரை ஷேர்

4. தளபதி விஜய் – ரூ 150 கோடி

5. கமல்ஹாசன் – ரூ 130 கோடி

6. பிரபாஸ் – ரூ 100 கோடி + லாபத்தில் 10% ஷேர்

7. ரஜினிகாந்த் – ரூ 118 கோடி

8. அக்ஷய் குமார் – ரூ 110 கோடி

9. அல்லு அர்ஜுன் – ரூ 85 கோடி + லாபத்தில் 10 % ஷேர்