
ரோகிணி தன்னுடைய திட்டத்தில் வெற்றி கண்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மீனா முத்து மற்றும் அண்ணாமலை என இருவருக்கும் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்க அந்த சமயம் அங்கு வரும் விஜயா என்னை கூப்பிடவே இல்ல என கோபப்படுகிறார். மனோஜ் சாப்பிட கூப்பிடவில்லையா எனவும் கோபப்பட எல்லாரும் சாப்பிட்டு முடித்ததும் மீதி இருக்கிறத சாப்பிட்டட்டும் என முத்து நக்கல் அடிக்கிறார்.

இந்த சமயம் புரோக்கர் ஒருவர் வீட்டுக்கு வர விஜயா அவரை வரவேற்க அவர் பணக்காரப் பெண் வீட்டு வரன் ஒன்று வந்திருக்கு என சொல்லி போட்டோவை காட்ட விஜய்யா பணக்கார குடும்பம் என்பதால் கெத்தாக சாரில் உட்கார்ந்து பொண்ணு நல்லாதான் இருக்கு ஆனா என் பையன் மனோஜை விட அழகா இல்ல என பில்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
பிறகு அண்ணாமலை பையனுக்கு இப்ப வேலை இல்லாமல் சும்மாதான் இருக்கான் ஏற்கனவே ஒரு கல்யாணம் என பழைய விஷயங்களை சொல்ல ஆரம்பிக்க அதெல்லாம் பொண்ணு வீட்ல சொல்லிட்டேன் அவங்க எதுவும் பிரச்சனை இல்லை என்று சொல்லிட்டாங்க. அப்படியா அது எப்படி என்று அண்ணாமலை கேட்க இல்லை பொண்ணு ஒருத்தனை காதலிச்சு கல்யாணம் பண்ணி ஏமாந்துடுச்சு என சொல்ல இரண்டாவது கல்யாணமா என விஜய்யா கோபமடைய வந்த புரோக்கர் உன் பையன் கல்யாண மேடையில் இருந்து ஓடிப்போனா அவனுக்கு ஒன்னு ஊனமா இருக்க பொண்ணுதான் கிடைக்கும் அப்படி இல்லன்னா இந்த மாதிரி இரண்டாம் தாரம் தான் வரும் என சொல்ல முத்து சரியா சொன்னீங்க என அவருக்கு சப்போர்ட் செய்து விஜயாவை வெறுப்பேற்றுகிறார்.

அதன் பிறகு விஜயா பார்வதி வீட்டுக்கு வர அங்கு வரும் ரோகிணி தன்னுடைய தோழியை போன் செய்ய சொல்லிவிட்டு அப்பாவிடம் பேசுவது போல கோபப்பட்டு பேசி போனை வைக்க விஜயா நீ என் பையனை கட்டிக்கிட்டு என் வீட்டுக்கு மருமகளா வர வேணாம் என் மகளாக வா.. நான் உன்னை நல்லபடியா பார்த்துகிறேன் என கேட்கிறார். உடனே ரோகிணி எனக்கு கல்யாணத்துல இஷ்டம் கிடையாது ஆனால் எனக்கு இப்ப என்ன சொல்றதுன்னு தெரியல கொஞ்சம் டைம் கொடுங்க என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார்.
ரூமுக்கு வந்த ரோகினி தன்னுடைய தோழியிடம் நடந்த விஷயங்களை சொல்லி சந்தோஷப்படுகிறார். மனோஜிடம் இந்த விஷயத்தை சொல்லாம நேரடியா அவங்க அம்மாகிட்டயே ஓகே சொல்லப் போறேன், அப்பதான் நான் போட்ட டிராமா எல்லாம் சக்ஸஸ் ஆகும் என சொல்கிறார்.

அதன் பிறகு மீனா கோவிலுக்கு வந்து நான் அவர் ஒரு உயிரை காப்பாற்றத்துக்காக நகை வச்சாரு என்பது தெரியாமல் கோபப்பட்டுட்டேன் என்னை மன்னிச்சிடு சாமி என சொல்ல மீனாவின் தங்கச்சி இது ரெண்டு பேருமே அவசர புத்திகாரங்க கோபப்பட்டு பேசுறீங்க என சொல்கிறார். மீனா அவரை விட்டு விலகி வருவதா? நெருங்கி போறதானே தெரியல என புலம்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.