
துணிவு படத்தின் டைட்டில் ஏற்கனவே உள்ள தமிழ் படத்தின் டைட்டில் என தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது துணிவு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

அஜித் குமாரின் 61வது திரைப்படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். எச் வினோத் மூன்றாவது முறையாக அஜித்துடன் கூட்டணி சேர்ந்து இந்த படத்தை இயக்குகிறார்.
படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியானது. இதுவரை வி என்ற எழுத்தில் படத்தின் தலைப்புகளை வைத்து வந்த அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த பாணியை மாற்றி உள்ளார்.

ஆனால் அஜித் 61 படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் இது ஏற்கனவே ஒரு படத்திற்கு வைக்கப்பட்ட டைட்டில் என தெரிய வந்துள்ளது. அந்த படத்தின் போஸ்டர் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளாகி உள்ளது.