எதிர்பார்க்காத அடுத்தடுத்த ட்விஸ்ட்டுகளுடன் நடிப்பில் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார் அஜித்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் துணிவு. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

படத்தில் சமுத்திரகனி மஞ்சுவாரியர் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

சென்னையில் உள்ள பிரபல வங்கி ஒன்று அரசாங்கத்திற்கு தெரியாமல் 500 கோடி ரூபாய் பணத்தை வைத்திருக்க அதை கொள்ளையடிக்க ஒரு கும்பல் பேங்குக்குள் இறங்க முடிவு செய்கிறது. அந்த கும்பல் பேங்குக்குள் இறங்கிப் பார்த்தால் அதற்கு முன்பாக அந்த பணத்தை கொள்ளையடிக்க வில்லனான அஜித் களத்தில் இறங்கியுள்ளார். அதன் பிறகு நடந்தது என்ன? அந்த பணத்தை கொள்ளை அடித்தது யார்? என்பது தான் படத்தின் கதைக்களம்.

படத்தைப் பற்றிய அலசல் :

நடிகர் அஜித் இதுவரை இல்லாத அளவிற்கு முற்றிலும் மாறுபட்டு நடிப்பை கொடுத்துள்ளார். நடிப்பில் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார் என நிச்சயம் சொல்லலாம்.

அஜித்தின் ஸ்டைல், கெட்டப், துப்பாக்கியை கையாண்ட விதம் என அனைத்தும் கைத்தட்டல்களை அள்ளுகிறது.

படம் முழுக்க வலம் வரும் கதாபாத்திரத்தில் நடித்து அஜித்துடன் சேர்ந்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளார் மஞ்சு வாரியர். இதுக்கான போலீஸ் ஆபீஸராக சமுத்திரகனி படத்தில் மிரட்டும் நடிப்பை கொடுத்துள்ளார்.

தொழில்நுட்பம் :

ஜிப்ரானின் பின்னணி இசை திரையரங்கை அதிர வைக்கிறது, மூன்று பாடல்களும் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது.

நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு காட்சிகள் அனைத்தையும் அழகாக்கி உயிர் கொடுக்க எடிட்டிங் கனகச்சிதம் ஆக அமைந்துள்ளது.

ஆக்ஷன் காட்சிகள் அடி தூள் என சொல்ல வைக்கிறது.

இயக்கம் :

இயக்குனர் எச் வினோத் வங்கி எப்படி எல்லாம் மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடிக்கிறது என்பதை துல்லியமாக துணிச்சலாக துணிவு படத்தின் மூலம் பேசியுள்ளார்.

கமர்சியல் படத்தில் அழுத்தமான கருத்தை வைப்பதில் கில்லி என மீண்டும் நிரூபித்துள்ளார்.

மின்னல் வேகத்தில் நகரும் முதல் பகுதியை செம கலக்கலாகவும் காமெடியாகவும் கொண்டு சென்றுள்ள வினோத் இரண்டாம் பாதியில் முழுக்கவும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் பேங்க் கொள்ளை குறித்த காட்சிகளை படமாக்கி உள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. திரைக்கதை

2. அஜித்தின் நடிப்பும் வசனமும்

3. மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரகனியின் நடிப்பு

4. பல எதிர்பாராத ட்விஸ்ட்

5. அழுத்தமான கதைக்களம்

தம்ப்ஸ் டவுன் :

1. சில இடங்களில் வழக்கமான லாஜிக்கல் தவறுகள்

REVIEW OVERVIEW
துணிவு விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
thunivu-movie-reviewமொத்தத்தில் துணிவு அடி தூள் என செல்ல வைக்கும் அதிரடி திருவிழா.