துணிவு திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை மஞ்சு வாரியர் பெற்றிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் கடந்த மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் 300 கோடியை தாண்டி வசூலித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது.

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி இருந்த இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களால் தற்போது வரை கொண்டாடப்பட்டு வரும் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை மஞ்சு வாரியர் பெற்ற சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அஜித்திற்கு சமமான வேடத்தில் நடித்து ரசிகர்களை அசர வைத்த இவர் இப்படத்தில் நடித்ததற்காக 1₹ கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருப்பதாக புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.