தக் லைஃப் படக்குழு, ‘தல’ டோனிக்கு புரோமோ: ரசிகர்கள் இன்றிரவு சரவெடி
மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ திரைப்படக் குழு, சிஎஸ்கே அணிக்காக வெளியிட்டுள்ள புரோமோ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேளை கமல் பாடியுள்ள ‘ஈசாணி மூலை’ பாடலை நேரடி லைவ்வாக வெளியிட திட்டமிட்டுள்ளனரா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் சீசன் 18-வது ஆட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணியை எதிர்கொள்கிறது. சிஎஸ்கே அணி விளையாடும் முதல் போட்டியே சென்னையில் தொடங்குவதால், பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘தல’ டோனி சிக்ஸர் அடிக்கிறாரோ.. இல்லையோ.. அவர் வந்தாலே போதும், என்பதற்காக ரசிகர்கள் சிலர் டிக்கெட் வாங்கிச் சென்று அவர் தரிசனத்தை கண்டு களிக்கின்றனர். அந்தளவிற்கு அவர் மீது அன்பை வைத்துள்ளனர். தமிழக வீரர் அஸ்வினும் மீண்டும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இன்று சென்னை அணி ஆடும் முதல் ஆட்டத்திற்காக, தக் லைஃப் படக்குழு, தல டோனி மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் (‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா) புரோமோ வீடியோவை வெளியிட்டு ஐபிஎல் செலிபிரேஷனை தொடங்கியிருக்கிறது.
அந்த வீடியோவில் ஒரே சிங்கம், ஒரே ரூல்ஸ்தான் என்பது போன்று வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளது. அதில், கமலுக்கு இணையாக டோனியும், குட்டி சிங்கமாக சிம்பு-ருத்ராஜ் கெய்க்வாட்டும் இருக்கும் புரோமோ வெளியானது. இதில், சிங்கங்கள் வேட்டைக்கு தயாராக இருப்பது போன்ற போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
இன்று இரவு தொடங்கும் போட்டியில் தக் லைஃப் படக்குழுவினரும் கலந்துகொண்டு சென்னை ரசிகர்களை குஷிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா துறையில் மணிரத்னம்-கமல் லெஜண்டுகளும், கிரிக்கெட் ஜாம்பவான்களும் இணைந்து நடத்தும் முதல் போருக்கு, ஆயத்தமாக இருக்கிறார்கள் ரசிகர்கள். வெற்றியை கொண்டாட காத்திருக்கின்றனர்.
தோல்வியை சந்தித்தாலும் சிங்கம் சிங்கம் தான் என்பதை உணர்த்தும் வகையில் புரோமோ வீடியோ இருக்கிறது. கமல் பாடியுள்ள ‘ஈசாணி மூலை’ பாடலை நேரடி லைவ்வாக வெளியிட திட்டமிட்டுள்ளனரா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. எப்படியோ, இன்றிரவு திருவிழா சரவெடி உறுதி.!
