வடமாநிலத்தை சேர்ந்த சில இளைஞர்கள் பசுமாட்டை தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Three youth molesting cow for long time – திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெருமா கவுண்டன்பாளையத்தில் வசித்து வருபவர் கந்தசாமி. இவர் ஒரு விவசாயி. இவர் ஒரு பசு மாட்டை வளர்த்து வருகிறார். அந்த மாட்டின் உடல் நலம் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்தது. இரவு நேரத்தில் நன்றாக இருக்கும் பசுமாடு காலையில் பலவீனமாக இருப்பதை கண்டு அவர் குழப்பமடைந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு மாட்டை தொழுவத்தில் கட்டிவிட்டு தூங்க சென்றார். நள்ளிரவில் மாடு கத்தும் சப்தம் கேட்டு அவர் எழுந்து சென்று பார்த்தார். அப்போது, மாட்டை காணவில்லை. மாட்டை தேடிய போது, அருகில் கோழிப்பண்ணை அறையில் இருந்து சத்தம் கேட்டு வருவதை கேட்டு அங்கு சென்று பார்த்தார்.

அஞ்சறைப் பெட்டியின் பொருட்களை வைத்தே ஜீரண பிரச்சினையை சரி செய்துகொள்ளலாம். தெரிந்து கொள்ளலாமா?

அப்போது, மூன்று வாலிபர் பசுமாட்டை பாலியல் வன்புணர்வு செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த மூவரையும் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில் அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அருகில் உள்ள கல்குவாரியில் பணிபுரிந்து வந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. தினமும் இரவு நேரத்தில் பசு மாட்டினை இழுத்து சென்று அவர்கள் வன்புணர்வு செய்து வந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here