Anjarai Petti : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Anjarai Petti :

செரிமானப் பிரச்சனைக்கு அஞ்சறை பெட்டியில் உள்ள அனைத்து பொருட்களும் மருந்தாக பயன்படுகிறது. அதைப்பற்றி பார்ப்போம்.

♧ உணவு உட்கொண்ட ஒரு மணி நேரம் கழித்து ஒரு டம்ளர் நீர் மோர் எடுத்து அதில் ஒரு சுண்டைக்காய் அளவு பெருங்காயத்தைப் பொடி கலக்கி, 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகளை நீக்கும்.

கூட்டாக சேர்ந்து தம்மடித்த போட்டியாளர்கள், பிக் பாஸ் கொடுத்த தண்டனை – ஷாக்கான பிக் பாஸ் வீடு.!

♧ 2 டம்ளர் நீரில் இரண்டு சுக்குத் துண்டுகள், இரண்டு ஏலக்காய், ஒரு ஸ்பூன் சீரகம் இவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் சேர்த்து கஷாயத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடித்து வந்தால், விசேஷ நாட்களில் பலகாரம் சாப்பிட்டால் ஏற்படும் அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம், உடல் வலி, அசதி நீங்கும். உடம்பு சுறுசுறுப்பாக இருக்கும்.

♧ ஓமம் 200 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 100 கிராம், கருஞ்சீரகம் 100 கிராம், பூண்டு 50 கிராம், கறிவேப்பிலை 100 கிராம்,

தோல் நீக்கிய சுக்கு 200 கிராம் இவற்றை லேசாக நல்லெண்ணையில் வறுத்துப் பொடி செய்து தினசரி பகல் உணவில் 2 ஸ்பூன் 1 பிடி சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வர சொரிமானம் ஆகி வயிற்றுக் கோளாறுகள் இன்றி இருக்கலாம்.

♧ ஒரு டம்பளர் தண்ணீரில் இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை மூன்றையும் கொதிக்க வைத்துக் குடித்தால், ஜீரணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here