இந்து பெண்களை இழிவாக பேசிய தொல் திருமாவளவன் தமிழகம் முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு !! | Political

Thol thirumavalavan Speech Controversy : பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள். இந்து தர்மப்படி அனைத்து பெண்களும் ஆண்களுக்கு கீழானவர்கள் என பெண்களைப் பற்றி தவறாக பேசியிருந்தார்.

இந்து பெண்களை இழிவாக பேசி, மத நல்லிணக்கத்தை சீர் குலைக்க முயற்சி செய்யும் திருமாவளவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து இணையதளத்தில் கோரிக்கை எழுந்து வருகிறது. இதனால் தமிழகம் எங்கும் திருமாவளவன் அவர்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதேபோல பெண்கள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தை திரும்பப்பெற வேண்டும், மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இவ்வாறு பெண்களைப் பற்றி இழிவாகப் பேசிவிட்டு திடீரென்று நான் முதல்வரானால் மதுக்கடைகளை மூடுவேன் என கூறியுள்ளது மேலும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த செயல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி அவர்களின் வெறுப்பிற்கு ஆளாகி விட்டார் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.