இந்த வாரம் டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள்..!முழு விவரம் இதோ
இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். குறிப்பாக சன் டிவி விஜய் டிவி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைவராலும் கவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாராவாரம் சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம்.
கயல் :
முதல் இடத்தை கயல் சீரியல் பிடித்துள்ளது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக இந்த சீரியல் முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது.
மூன்று முடிச்சு :
இரண்டாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல் உள்ளது. கடந்த வாரம் மூன்றாம் இடத்திலிருந்து இந்த சீரியல் முன்னேறி இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது.
சிங்க பெண்ணே : மூன்றாவது இடத்தை சிங்க பெண்ணே சீரியலும் நான்காவது இடத்தை “மருமகள்” சீரியலும் பிடித்துள்ளது.
ஐந்தாவது இடத்தில் “சுந்தரி” சீரியலும் ஆறாவது இடத்தில் “ராமாயணம்” சீரியலும் இடம்பெற்றுள்ளது.
ஏழாவது இடத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை’ சீரியல் பிடித்துள்ளது எட்டாவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் “மல்லி”சீரியல் பிடித்துள்ளது.
9 மற்றும் 10வது இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் சின்ன மருமகள் சீரியல் உள்ளது. இந்த வார டிஆர்பி யில் பெரும்பான்மையான இடத்தை சன் டிவி சீரியல்கள் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் உங்களுக்குப் பிடித்த சீரியல் எது? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.