‘கூலி’ பட சண்டைக் காட்சிக்காக, ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ கற்கிறார் ரஜினி: படக்குழுவினர் வியப்பு..
‘கல்விக்கு கரையில்லை’ என்பது போல, திரைக்கலைக்கும் கரையில்லை தானே. அவ்வகையில் தனது 73-வது வயதிலும் புதிய நுணுக்கங்களோடு கூடிய வித்தையான ஒரு வித சண்டைப் பயிற்சியை கற்று வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இது குறித்த விவரம் பார்ப்போம்.. வாங்க..
‘வேட்டையன்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், பெரும்பாலான ரசிகர்களுக்கு இப்படத்தில் சொன்ன கருத்துக்கள் பிடித்திருந்தன. அதன் காரணமாக, படத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது. இதனால், படத்தின் வசூலும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகின்றது.
வேட்டையன் படத்தின் ரிலீசுக்கு முன்னர் ரஜினிகாந்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதையடுத்து, சில நாட்கள் ஓய்வில் இருந்த ரஜினியை வேட்டையன் படக்குழு சந்தித்து படத்தின் வெற்றியினை கொண்டாடியது.
இதையடுத்து வேட்டையன் வெற்றி கொடுத்த உத்வேகத்தில் ரஜினி தன் அடுத்த படமான கூலி படப்பிடிப்பில், மின்னல் வேகத்தில் கலந்துகொண்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் கூலி படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக, தற்போது சண்டை காட்சிகளை லோகேஷ் படமாக்கி வருகின்றார்.
இன்று ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இணைந்திருக்கும் நிலையில், கூலி படத்திற்காக ரஜினி ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ கற்றுக்கொண்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. கூலி சண்டை காட்சிகளை சற்று வித்தியாசமாக படமெடுக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம். இந்த ஐடியாவை ரஜினியிடம் கூறியிருக்கின்றார்.
உடனே, ரஜினிக்கு இந்த ஐடியா பிடித்துப்போக ரஜினியே தானாக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டு, அந்த நுணுக்கங்களோடு சண்டை காட்சிகளில் நடித்து வருகிறாராம். இதனை பார்த்த லோகேஷ் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு அசந்து போய்விட்டார்களாம்.
இந்த வயதிலும் அதுவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓய்விற்கு பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்டாலும், ரஜினி இந்தளவிற்கு அர்ப்பணிப்போடு இருக்கிறாரே என ஒட்டுமொத்த படக்குழுவும் பாராட்டி வருகின்றார்கள்.
இதைத்தொடர்ந்து, கண்டிப்பாக ரஜினியின் இந்த கடினமான உழைப்பிற்கு சிறப்பான பலன் கிடைக்கும் என உறுதியாக சொல்லப்படுகின்றது.
இதையடுத்து, கூலி படத்தின் மூலம் ரஜினி 1000 கோடி வசூல் சாதனையை நிகழ்த்த தயாராகி வருகின்றார். இதுவரை, தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் 1000 கோடி வசூலை எட்டாத நிலையில், ரஜினியின் கூலி திரைப்படமாவது அந்த சாதனையை முறியடிக்குமா? என ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமே ஆவலாக எதிர்பார்த்திருக்கின்றனர்.
திரைமண்ணில், விதைத்த விதைகள் வீரியமாய் இருந்தால், அறுவடையும் பெருகும் தானே.! அப்ப.. சும்மா அதிரும்ல..