
Thimiru Pudichavan Censored : விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திமிரு புடிச்சவன் படம் சென்சாரில் U/A சான்றிதழ் வாங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல பாடகருமான நடிகருமாக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் காளி படத்திற்கு பின்பு கணேஷா இயக்கத்தில் திமிரு பிடிச்சவன் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் என இருவருமே இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளனர்.
ஹீரோ, மியூசிக், எடிட்டிங் என மூன்று பணிகளையம் விஜய் ஆண்டனியே செய்துள்ளார். மேலும் இந்த படத்தை பாத்திமா தயாரித்துள்ளார்.
வரும் நவம்பர் 6-ல் தீபாவளி அன்று விஜயின் சர்கார் படத்துடன் மோத உள்ள இந்த படம் சென்சார் பணிகள் முடிவடைந்துள்ளது.
படம் சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக டீஸர், ட்ரைலர் என இரண்டுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
#thimirupudichavan ( U/A ) ???????????????? pic.twitter.com/k6bJfVZ3WN
— vijayantony (@vijayantony) October 26, 2018