நீண்ட இடைவெளிக்கு பிறகு லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி உள்ள தி வாரியர் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் லிங்கசாமி. அஞ்சான் படத்துக்குப் பிறகு இவரது இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தேனி, நடிகர் ஆதி உட்பட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தி வாரியர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகி உள்ளது.

தமிழ் படமா? தெலுங்கு படமா? லிங்குசாமிக்கு கம்பேக் கொடுக்குமா? தி வாரியர் விமர்சனம்

படத்தின் கதைக்களம் :

மதுரையில் ஒரு ஊரில் மருத்துவராக பணியாற்றுகிறார் ராம் பொத்தேனி. இதே ஊரில் தாதாவாக இருக்கும் ஆதியை எதிர்க்கும் சூழ்நிலை ராமுக்கு ஏற்படுகிறது. ஆனால் ஆதி ராம் பொத்தேனியை அடித்து கூறிவிட்டு துரத்துகிறார். அடி வாங்கி ஊரை விட்டு ஓடிய ராம் பொத்தேனி இரண்டு வருடத்திற்கு பிறகு அதே ஊருக்கு போலீசாக வருகிறார். போலீசாக வந்த ராம் பொத்தேனி என்ன செய்கிறார் என்பது தான் படத்தில் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

படத்தில் ஹீரோவான ராம் வில்லன ஆதி என இருவரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனாலும் சில இடங்களில் ஆதி கெத்தான வில்லனாக நடித்து இருக்கலாம் என தோன்றுகிறது.

கீர்த்தி செட்டி அழகான நடிப்பை கொடுத்துள்ளார். படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் கதாபாத்திரத்துக்கு ஏத்த மாதிரி நடிப்பை கொடுத்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களின் இசை படத்திற்கு பலம் என்றாலும் புல்லட் பாடலை தவிர மற்ற நான்கு பாடல்கள் சலிப்பையே தருகின்றன.

நீண்ட இடைவெளிக்கு பிறகு படத்தை இயக்கியுள்ள லிங்குசாமி பல இடங்களில் தெலுங்கு படத்தின் உணர்வை கொண்டு வருகிறார். தெலுங்கு ரசிகர்களை கவரும் வகையில் பெரும்பாலான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தமிழ் படமா? தெலுங்கு படமா? லிங்குசாமிக்கு கம்பேக் கொடுக்குமா? தி வாரியர் விமர்சனம்

மதுரை சார்ந்த கதை என சொல்லிவிட்டு ஹைதராபாத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. லாஜிக் மீறல்களை கண்டுகொள்ளாமல் பார்த்தால் நிச்சயம் ஓரிரு முறை பார்க்கலாம். தெலுங்கு ரசிகர்களுக்கு லிங்குசாமி நிச்சயம் கம்பேக் கொடுப்பார். நாம் தமிழ் ரசிகர்களுக்கு.??