இந்த வாரம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது பிரபு, சூர்யா, மோகன்லால், நானி நடித்த படங்கள்..

Web Ads

வருகிற 30-ந்தேதி திரையரங்கு மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் பற்றிக் காண்போம்..

5 சிறு பட்ஜெட் படங்கள்: டி.ஆர்.பாலா இயக்கத்தில் முகென் ராவ் நடித்த ‘ஜின்’ படம் திரைக்கு வருகிறது. அதேபோல், பிரபு நாயகனாக நடித்த ‘ராஜபுத்திரன்’ படமும் மே 30-ந்தேதி வெளியாகிறது.

ராம் இந்திரா இயக்கிய ‘மனிதர்கள்’ படமும் மே 30-ந்தேதி வருகிறது. மகேஷ் வைஷ்ணவி, பாக்யராஜ் நடித்த ‘ஆண்டவன்’ படமும் ரிலீஸாகிறது.

மேலும் ‘கராத்தே கிட்’ மற்றும் ‘தி வெர்டிக்ட்’ ஆகிய படங்களும் மே 30-ந்தேதி வெளியாகிறது. இது தவிர, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் வருகிற மே 31-ந்தேதி ஓடிடிக்கு வருகிறது. மேலும் ‘வானில் தேடினேன்’ என்கிற திரைப்படமும் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பிரம்மாண்ட படங்களாக, நானி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஹிட் 3’ படம் வருகிற 29-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதேபோல், மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வசூல் அள்ளிய ‘துடரும்’ படம் மே 30-ந்தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பிடித்த படத்தை பார்ப்போம், ரசிப்போம்.!

the theatre and ott release movies on may 30 and 31
the theatre and ott release movies on may 30 and 31