டிராகன் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? உண்மையை உடைத்த இயக்குனர்..!
டிராகன் படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் ஏற்கனவே கோமாளி படத்தை இயக்கிய இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.
தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று சொல்லலாம்.
மேலும் அனுபமா பரமேஸ்வரன்,கயடு லோகர், கௌதம் மேனன் ,மிஷ்கின் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் அஸ்வந்த் இந்த படத்தின் பட்ஜெட் மொத்தம் 37 கோடி என்பதை கூறியுள்ளார். மேலும் சொன்ன பட்ஜெட்டில் படத்தை எடுத்துக் கொடுத்துள்ளதாகவும் சொல்லியிருக்கிறார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
