ஸ்லோமோஷன் இல்லையென்றால் ரஜினிகாந்த் சினிமாவில் நீடித்திருக்க முடியாது : ராம் கோபால் வர்மா பேச்சு..!
ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார் ராம்கோபால் வர்மா.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப் பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா பேசி உள்ளார் சமீபத்தில் நடந்த பேட்டியில் ஒரு நடிகர் எந்தவிதமான கதாபாத்திரத்திலும் நடிக்க கூடியவர் ஆனால் ஸ்டார் என்பவர் ரசிகர்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படி நடிப்பவர். ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகரா எனக் கேட்டால் எனக்கு தெரியவில்லை ஸ்லோமோஷன் மட்டும் இல்லை என்றால் ரஜினியால் சினிமாவில் நீடித்திருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இவருடைய பேச்சுக்கு உங்களின் கருத்து என்ன என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
