Web Ads

பிக் பாஸ் விஷாலா இது? சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க..!

பிக் பாஸ் விஷாலின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

Is this Bigg Boss Vishal Look how he is in childhood..!
Is this Bigg Boss Vishal Look how he is in childhood..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமானவர் VJ விஷால். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸில் இவருக்கு மக்கள் ஆதரவு கொடுத்திருந்த நிலையில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் விஷால் என அனைவருக்கும் தெரியும் இது மட்டுமில்லாமல் அவருக்கு இயக்குனராக வேண்டும் என்பதும் ஆசையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது அவரின் பிறந்த நாளான இன்று அவருடைய சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Is this Bigg Boss Vishal Look how he is in childhood..!
Is this Bigg Boss Vishal Look how he is in childhood..!