ரஞ்சிதமே பாடலுக்கு பாட்டி போட்ட டான்ஸ் வீடியோ வைரல்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். இவர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படத்திற்கும் இசையமைத்திருந்தார். பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்து நடித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ரஞ்சிதமே பாடலுக்கு… பாட்டி அம்மா ஆடிய வெறித்தனமான டான்ஸ்.!

இந்நிலையில் இப்படத்தில் தமன் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ரஞ்சிதமே பாடல் அனைத்து வயதினரையும் ஆட்டம் போட வைத்து மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில் திரையரங்கில் இப்பாடலுக்கு வயதான பாட்டி ஒருவர் திரையரங்கமே அதிரும் அளவிற்கு வெறித்தனமாக டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது. அதனை இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து மகிழ்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.