இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த படம் பரியேறும் பெருமாள். இப்படம் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 28ம் தேதி வெளியாகி இருந்தது.

படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சாதாரண ரசிகர்களை தாண்டி திரையுலக பிரபலங்கள் பலரும் இது பார்க்க வேண்டிய படம் என பாராட்டி வருகின்றனர்.

படம் பார்க்காமலே இப்படியா? பரியேறும் பெருமாள் கதிருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தளபதி - என்ன செய்திருக்கார் பாருங்க.!

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் கதிருக்கு போன் செய்து வாழ்த்தியுள்ளார். ஆனால் தளபதி விஜய் நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை, ரசிகர்களிடம் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது, அதற்காக வாழ்த்துக்கள்.

மேலும் படத்தை பார்த்து விட்டு படத்தை பற்றிய நான் என்னுடைய கருத்துகளை கூறுகிறேன் எனவும் கூறியுள்ளார். விஜயின் இந்த வாழ்த்து பரியேறும் பெருமாள் டீமிற்கு மிக பெரிய உற்சாகத் கொடுத்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.