கைதி படம் பார்த்து விட்டு விஜய் கொடுத்த ரியாக்ஷன் மற்றும் அவரின் செயலை பற்றி லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
போஸ்டரை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விருது விழா ஒன்றில் விஜயை பற்றி பேசியது வைரலாகி வருகிறது.
விஜய் 64 ஷூட்டிங்கின் போது விஜய் கைதி படம் பார்த்து விட்டு என்னை கட்டி அணைத்து வாழ்த்து கூறினார். அதன் பிறகு அரை மணி நேரத்திற்கு கைதியை பற்றி மட்டும் தான் பேசினார் என கூறியுள்ளார்.