தளபதி விஜய் அவர்கள் நடிகர் யோகி பாபுவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி காமெடி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் யோகி பாபு. இவர் சிறந்த காமெடியனாக மட்டுமின்றி சிறந்த கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவர் தற்போது தளபதி விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தளபதி விஜய் அவர்கள் யோகி பாபுவிற்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக கொடுத்து சர்ப்ரைஸ் செய்துள்ளார்.

இது குறித்து நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பேட்ட எனக்கு சர்ப்ரைஸா கொடுத்த விஜய் அண்ணாவுக்கு மிகவும் நன்றி என தெரிவித்துள்ளார். தற்போது யோகி பாபு வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.