Thalapathy Vijay First Time Visit Fans After Four Months

Karnan Climax Change : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.இந்த படத்தை தொடர்ந்து பரியேறும் பெருமாள் புகழ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள கர்ணன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவீதம் முடிவடைந்து கிளைமேக்ஸ காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளன. இந்த நிலையில்தான் கொரானா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அந்த காட்சிகள் படமாக்கப்படாமல் இருந்து வருகின்றன.

தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த கிளைமாக்ஸ் காட்சியில் படக்குழு மாற்றத்தை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது கர்ணன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சி 500 பேர் கொண்டு உருவாக்கப்பட்ட இருந்ததாம்.

ஆனால் தற்போது அதற்கு சாத்தியமில்லை என்பதால் படக்குழு இதில் மாற்றத்தை செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.