Pushpa 2

இன்று கீர்த்தி சுரேஷ் திருமணத்தில், பட்டு வேட்டி சட்டையில் விஜய்: வைரலாகிறது நிகழ்வு

நடிகை கீர்த்தி திருமணத்தில், புது மாப்பிள்ளை போல செம க்யூட்டாக கலந்து கொண்ட நிகழ்வு, தற்போது வைரலாய் தெறிக்கிறது. இது குறித்த கோலாகலம் காண்போம்..வாங்க..

திரைத்துறையில், கிளாமர் கிக்கும், ஹோம்லி லுக்கும் மிக்ஸான குயின் தான் கீர்த்தி சுரேஷ். இந்த இன்முக தேவதைக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது. தன் நீண்ட கால காதலர் ஆண்டனி தட்டில் என்பவருக்கு மனைவியாக வருகிறார்.

இந்த ஜோடியின் திருமண கொண்டாட்டங்கள் கோவாவில் களைகட்டி உள்ளன. நிகழ்ச்சியில், ஏராளமான பிரபலங்கள் குழுமியுள்ளனர்.

அவ்வகையில், தளபதி விஜய்யும் கீர்த்தியின் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு, புது மாப்பிள்ளை போல பட்டு வேட்டி சட்டை அணிந்து, அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தற்போது செம வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ’50 வயதிலும் இவ்வளவு இளமையாக இருக்கிறாரே’ என வியந்து பார்த்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படத்தை விட, அதில் கலந்துகொள்ள சென்ற விஜய்யின் புகைப்படம் தான் தற்போது டிரெண்டிங்கில் தெறியாய் தெறிக்கிறது.

முன்னதாக, விஜய்யும் கீர்த்தி சுரேஷும் முதன் முறையாக ‘பைரவா’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அதைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்க்கார்’ படத்திலும் இந்த ஜோடி பொருத்தம் வரவேற்கப்பட்டது.

இதில், விஜய்யின் தீவிர ரசிகை கீர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை, விஜய் படங்களை முதல்நாள் முதல் ஷோ பார்த்து விடுவார். அந்த அளவுக்கு தீவிரமான ரசிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். விஜய்க்கும் கீர்த்தியை ஒரு தோழியாக பிடிக்கும் என்பதால், அவர் திருமணத்தில் கலந்து கொள்கிறார். மேலும், கீர்த்தி சுரேஷ் திருமணத்தில், இயக்குனர் அட்லி அவரது மனைவி பிரியா, ஆகியோரும் கலந்துள்ளனர்.

அப்றமென்ன, சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளில் நடைபெறும் ‘தேவதை’ கீர்த்தியின் திருமணத்திற்கு.. நாமும் ஒரு டன் பூக்கொத்து கொரியரில் அனுப்புவோமாக.!