பலமுறை தோல்வியைத் தழுவியுள்ளது விஜய் ஷங்கர் கூட்டணியில் உருவாக இருந்த படங்கள் குறித்த சந்திப்பு.

Thalapathy Vijay and Shankar Movie Update : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். அடுத்ததாக இவரது இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படம் பற்றி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறனர்.

இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு விஜயை வைத்து ஒரு படத்தை இயக்கலாம் என ஷங்கர் விஜயை சந்தித்து கதை கூறியுள்ளார். இந்த கதை தளபதி விஜய் ஹிட் பிடித்திருந்தது அடுத்தகட்ட நகர்வுக்கு முன்னேறவில்லை.

இந்த முறை மட்டுமல்லாமல் இதற்கு முன்பு பலமுறை இந்த கூட்டணி அமைய இருந்து அமைய முடியாமல் சென்றுள்ளது. அதற்கான காரணமாக தளபதி விஜய் மற்றும் ஷங்கர் இருவருக்கும் மிகப்பெரிய தொகையைக் கொடுத்து படத்தை முடிப்பது என்பது இயலாத காரியம் என்பதால் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தப் படத்தைத் தயாரிக்க தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.