Thalapathy Special Day
Thalapathy Special Day

Thalapathy Special Day – 1992-ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி எந்தவித ஆர்பாட்டமுமின்றி நாளைய தீர்ப்பு என்றொரு படம் வெளியானது.

பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் என்பது மட்டுமே இப்படம் மீதான சின்ன எதிர்பார்பாக இருந்தது. ஆனால் படம் வெளியானதும் பல எதிர்மறையான விமர்சனங்கள் கிளம்பியது.

காசு கொடுத்து பார்க்க தகுதியில்லாத முகம் என காட்டமான விமர்சனங்கள் எழுந்தது. இவரெல்லாம் ஹீரோவா என பலரும் வெளிப்படையாகவே பேசத் தொடங்கினார்கள்.

ஆனால் இவை எதுவும் அந்த 18 வயது இளைஞனை அசைக்கவில்லை. அன்று தன் அறிமுக படத்துக்காக திரும்பிய பக்கமெல்லாம் காட்டமான விமர்சனத்தை சம்பாதித்த அந்த இளைஞன், இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் தன் பட சாதனைகளை தானே முறியடிக்கும் வசூல் சக்ரவர்த்தியாகவும் வலம்வரும் ’தளபதி’ விஜய்.

பல அவமானங்களையும் விமர்சனங்களையும் கடந்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மிளிரும் விஜய்க்கு இன்று ஒரு ஸ்பெஷல் நாள். அது என்னவென்றால், விஜய் கேரியரில் பல படங்கள் வெளியான நாள் இன்று.

17 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் முதல்முறையாக அரசியல் பேசி நடித்த தமிழன் வெளிவந்த நாள் இன்றுதான். 14 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜாலியான ஒரு காதல் கதையில் நடித்த சச்சின் படம் வெளிவந்த நாள் இதுதான்.

அவ்வளவு ஏன், 3 ஆண்டுகளுக்கு முன்பு அட்லியுடன் விஜய் முதல்முறையாக இணைந்த தெறி படம் வெளிவந்த நாளும் இதுதான். அதனால் இன்றைய நாளை விஜய் ரசிகர்கள் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.