
தளபதி விஜய்க்கு ஜோடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் டிவி நடிகை இருப்பதாக தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தின் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்கலாம் என தகவல்கள் வெளியான நிலையில் தற்போது திரிஷா வேண்டாம் என வெங்கட் பிரபு முடிவு எடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் விஜய்க்கு ஜோடியாக ஒரு சில படங்களில் நடித்த நடிகையை தான் நடிக்க வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த நடிகை வேறு யாருமில்லை விஜய் டிவியில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த ப்ரியா பவானி சங்கர் தான் என சொல்லப்படுகிறது. ப்ரியா பவானி சங்கர் படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருவதன் காரணத்தினால் வெங்கட் பிரபு இப்படி ஒரு பிளான் போட்டு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
