Thalapathy 67 Movie Details

தளபதி விஜய் மூன்று மொழிகளில் படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Thalapathy 67 Movie Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து திலீப்குமார் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும், தளபதி 65 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படியான நிலையில் தளபதி 67 குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தளபதி 67 படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பிலும், இயக்குனர் வம்சி இயக்கத்திலும், இந்தத் திரைப்படம் உருவாகும் என்றும், மேலும் முதன்முறையாக தமிழ் தெலுங்கு இந்தி மொழிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.