Thalapathy 67 Director and Producer Detail

தளபதி விஜய் மீண்டும் சூப்பர் ஹிட் இயக்குனருடன் இனைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Thalapathy 67 Director and Producer Detail : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் பீஸ்ட் என்ற திரைப்படம் 2022 கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைக்குள், சென்னை முழுவதும் சீர் செய்யப்படும் : அமைச்சர் உறுதி

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். வம்சி இயக்கும் இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது இது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Shock-க்கு மேல Shock-கு கொடுக்குறாங்க – அதிர்ச்சியில் Deepa அக்கா..! | Saravana Stores Elite Diamond

மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் விஜய் இணைய முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இணையும் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.