தளபதி அறுபத்தி ஆறு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 66 Movie Heroine Update : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் என்று திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தினை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.

தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடி இவர்தான்?? எகிறும் எதிர்பார்ப்பு
ஆத்மா, மறுபிறவி எடுத்திருந்தால் தர்ப்பணம் வீணாகுமா?

இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ராஜு தயாரிக்க உள்ளார். எஸ் தமன் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவர் தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் தெலுங்கு மற்றும் இந்தி என இரண்டு படத்திலும் நாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Naan #thala veriyan bro – #biggbosstamil #abhiramivenkatachalam #shorts