Thalapathy 66 Movie Director
Thalapathy 66 Movie Director

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்க உள்ள படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Thalapathy 66 Movie Director : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

அதேசமயம் சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைவிட்டால் அதற்கு பதிலாக தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

சிறையில் இருந்ததால் பறிபோன பாகுபலி வாய்ப்பு.. முதலில் கட்டப்பாவாக நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகர் தானாம் – ஷாக்கிங் சீக்ரெட்!

ஆனால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தளபதி 66 படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

சிறுத்தை சிவா கூறிய ஒன்லைன் தளபதி விஜய்க்கு பிடித்து விட்டதால் இந்தக் கூட்டணி அமைய ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது.

தளபதி 66 படத்தை முருகதாஸ், அருண்ராஜா காமராஜ், மகிழ் திருமேனி ஆகியோர்களில் ஒருவர் இயக்குவார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சிறுத்தை சிவாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.

மேலும் சிறுத்தை சிவா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து உருவாகி வரும் அண்ணாதத திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.