Thalapathy 65 Vijay Role Details Leaked on Internet.! | Kollywood Cinema News | Tamil Cinema News | Thalapathy Vijay | Shankar | Muthalvan 2
தளபதி 65 படத்தில் விஜய் என்ன ரோலில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Thalapathy 65 Vijay Role : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த இரண்டு படங்களை தொடர்ந்து விஜய் வேலாயுதம் பட இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

அதன் பின்னர் ஷங்கர் இயக்கத்தில் தான் நடிக்க உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு தகவல் கிடைத்துள்ளது, அதாவது விஜய் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பது உறுதியானால் அந்த படத்தில் முதலமைச்சராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் வேடம் என்பதால் நிச்சயம் அது முதல்வன் 2 படமாக தான் இருக்கும் என விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அதே சமயம் ஏற்கனவே லைட்டான அரசியல் பேசிய விஜய் படங்களுக்கே பெரிய எதிர்ப்பு கிளம்பியது. இந்த படத்தில் விஜய் முதல்வராகவே நடித்தால் அதனை ரிலீஸ் செய்ய விடுவார்களா? என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.