Suriya 39 & Thalapathy 65
தளபதி 65 படத்தை வெற்றி மாறன் தான் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் தனுஷை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இறுதியாக இவரது இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படமும் நல்ல வெற்றியை பெற்றது.

இதனையடுத்து நேற்று காலை சூர்யா 39 படத்தை வெற்றிமாறன் தான் இயக்க உள்ளார் என தகவல் பரவியது. இதனால் #Suriya39 என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.

இந்நிலையில் தற்போது வெற்றிமாறன் விஜயை சந்தித்து நேரில் கதை கூறியதாகவும் அது விஜய்க்கும் பிடித்து விட்டதாகவும் இதனால் தளபதி 65 படத்தை வெற்றிமாறன் தான் இயக்க போகிறார் என தகவல் பரவ விஜய் ரசிகர்களும் இதனை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் உண்மை என்ன? வெற்றிமாறன் அடுத்து யாரை இயக்க போகிறார்? சூர்யாவா? விஜயா? அல்லது வேறு யாரையாவதா? என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.